விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற்றம் : மஹிந்த அமரவீர !

விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் அனைவரும் செலவு மேலாண்மை குறித்த அரசாங்க கொள்கையின் அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

இது குறித்த அறிவித்தலை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

இதன்படி, விவசாய அமைச்சில் நீண்டகாலமாக கடமையாற்றும் மேலதிக செயலாளர் உட்பட பல திணைக்கள அதிகாரிகள் வேறு நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு கூறுகிறது.

தற்போது விவசாய அமைச்சில் 03 அபிவிருத்திப் பிரிவுகள், 03 கட்டுப்பாட்டுப் பிரிவுகள், 03 கணக்கியல் பிரிவுகள் மற்றும் 03 போக்குவரத்துப் பிரிவுகள் உள்ளதோடு, பெருமளவான அதிகாரிகள் கடமையின்றி இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.Published from Blogger Prime Android App