ஒருநாள் சேவையின் கீழான சாரதி அனுமதிப்பத்திர விநியோகத்தில் மட்டுப்பாடு !

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திர அலுவலகத்தில் நாளொன்றுக்கு 50 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மட்டுமே தற்போது வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சேவையில் நாளொன்றுக்கு 50 சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டபோதிலும், திடீர் வெளிநாட்டுப் பயணம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்த அவர், ஏனைய விண்ணப்பதாரர்கள் சாதாரண சேவையின் கீழ் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு இல்லாதபோது, ஒரு நாள் சேவையின் கீழ் நாளொன்றுக்கு சுமார் 1,500 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App