வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

இன்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் செலவினங்கள் குறித்து விவாதம் நடைபெறவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி தொடங்கியது.

நேற்று இடம்பெற்ற சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று விவாதித்து அதற்கு ஒப்புதல் அளித்தனர்.

குழுநிலை விவாதம் டிசம்பர் 8ஆம் திகதி வரை 13 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் இறுதி வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.Published from Blogger Prime Android App