15,000 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையில் இருந்து விலகல் !

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.

விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு கடந்த நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று (14) வரையில் 15,476 இராணுவத்தினர் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு அறிவித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 15,165 இராணுவ வீரர்கள் ஏற்கனவே சட்டப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 194 அதிகாரிகள் அனுமதி அறிக்கை கிடைத்தவுடன் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பொது மன்னிப்பு காலம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத முப்படையினருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என இராணுவ ஊடகப் பிரிவு அதிகாரி பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App