பரராஜசிங்கத்தின் 17 ஆவது நினைவுநிகழ்வு - திருப்பலியில் பங்கேற்றார் சாணக்கியன்!

பரராஜசிங்கத்தின் 17 ஆவது நினைவு நிகழ்வு - திருப்பலியில் பங்கேற்றார் சாணக்கியன்!

 

ஒட்டுக்குளுவினர் மக்களுக்கு ஆற்றிய கொடூரங்கள், துரோகங்கள் எம் மக்களுக்கு எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க கடவுளை இந்த நன்னாளில் பிராத்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்கள் உயிர் நீத்த 17வது ஆண்டு நினைவு நினைவு நாள் இன்றாகும்.

இந்தநிலையில் அவர் படுகொலை செய்யப்பட்ட அதே மட்டக்களப்பு புனித மரியன்னை தேவாலயத்தில் நடந்த நாத்தார் தின ஆராதனையில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஆயுதம் தரித்த ஒட்டுக்குளுவினரால் அவர் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டது போன்ற நிகழ்வு மற்றும் இவ்வாறான ஒட்டுக்குளுவினர் மக்களுக்கு ஆற்றிய கொடூரங்கள், துரோகங்கள் எம் மக்களுக்கு எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க கடவுளை இவ் நன்னாளில் பிராத்திக்கின்றேன்.

எம் மக்கள் தங்கள் ஆரோக்கியமான எதிர்காலத்தை தாங்களே உருவாக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டார்.

ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு புனித நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையின் போது துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App