நாட்டில் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ள 2,000 மதுபானசாலைகள்

நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 4,910 மதுபான சாலைகளில், சுமார் 2,000 மதுபானசாலைகள் தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் மதுபான வியாபாரிகளாகவும் போதைப்பொருள் வியாபாரிகளாகவும் மாறியுள்ளதாக குறிப்பிட்ட டலஸ், அவர்களின் பெயர்களை வெளியிட தாம் தயங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனை செய்வதை தவிர்த்து, போதைப்பொருள் வியாபாரிகளின் வீடுகளை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்Published from Blogger Prime Android App