விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை சமாளிக்க 2012 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட பணம் ஆண்டு இறுதியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது : மைத்திரிபால சிறிசேன !

விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை சமாளிக்க 2012 ஆம் ஆண்டு ஆளுநர்களுக்கு அனுப்பப்பட்ட பணம் ஆண்டு இறுதியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் தலையிட ஆளுநர்கள் விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டத்தில் விவசாய அமைச்சின் செலவீனங்கள் மீதான குழு விவாதத்தின் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் நான்கில் ஒரு பங்கு உணவுகள் விலங்குகளால் அழிக்கப்படுவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.Published from Blogger Prime Android App