2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தது.

அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்களிப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவி விக்கினேஷ்வரன் மற்றும் எம். வேலுகுமார் ஆகியோர் கலந்து கொள்ளவில்லைPublished from Blogger Prime Android App