சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபான பார்கள், ஹோட்டல்கள், கடைகள் என்பவற்றை 24 மணி நேரமும் திறக்க வேண்டும் : டயானா கமகே !

இந்த நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபான பார்கள், ஹோட்டல்கள், கடைகள் என்பவற்றை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இரவு 10 மணிக்கு மேல் இந்த இடங்கள் மூடப்பட்டால், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் பணம் எப்படி செலவாகும், இரவு பொருளாதாரம் இல்லை என்றால், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பணத்தை செலவிட மாட்டார்கள் என்று கூறினார்.

சுற்றுலாத் துறையின் மூலம் அதிகபட்ச வருமானம் பெற, மதுபானக் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவில் மது அருந்த விரும்பினால், அதை வாங்க இடம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.Published from Blogger Prime Android App