மின் விநியோகத்தை தடைசெய்தால் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட பரீட்சார்த்திகள் பாதிக்கப்படுவர் : கல்வி அமைச்சர் !

மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்பால் அதிக நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியது நான் தான். எனவே தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (01) விஷேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது மனிதாபிமானமற்ற செயல், அதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதனை நான் ஏற்கவில்லை. எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆரம்பமாக இருக்கின்றது.

இந்தக் காலத்தில், மின்சார விநியோகத்தை தடை செய்யவும் முடியாது. அதே போன்று மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கவும் முடியாது. அப்படி செய்தால் மூன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட பரீட்சார்த்திகள் பாதிக்கப்படுவார்கள்.

அதனால் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் குறித்த அமைச்சுக்கு அறிவுறுத்தி, அந்த விடயத்தில் இலகு நடைமுறை ஒன்றை மேற்காெள்ளுமாறு தெரிவிப்போம் என தெரிவித்தார்.Published from Blogger Prime Android App