வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி.க.கலாறஞ்சினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்டு இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரத்தை வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி, மற்றும் வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
