ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App