54 அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் - வருடாந்தம் 86,000 கோடி ரூபா நட்டம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் உள்ளிட்ட 54 அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டமீட்டி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 54 நிறுவனங்களும் வருடாந்தம் 86 ஆயிரம் கோடி ரூபா நட்டத்தில் இயங்குவதாகவும் கடந்த வருடத்தில் இந்த அனைத்து நிறுவனங்களும் 86 ஆயிரம் கோடி ரூபா நட்டமீட்டியுள்ளதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை 420 அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் அரசாங்க பராமரிப்பில் உள்ளதாகவும் அத்துடன் அரச நிறுவனங்களின் 32 நிறுவனங்கள் மோசடி நிறைந்ததாகக் காணப்படுவதாகவும் அதற்கான தரவுகளை 'கோப்' அண்மையில் வெளியிட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நட்டமீட்டும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாக முறையே பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை மின்சாரசபை ஆகியன இனங்காணப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் கடந்த 3 வருடங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாவை நட்டமீட்டியுள்ளதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை பெற்றோலியக கூட்டுத்தாபனமானது இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் 62 ஆயிரத்து 800 கோடி ரூபாவை நட்டமீட்டியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் 24 ஆயிரத்து 800 கோடியையும் மின்சார சபை 4700 கோடியையும் நட்டமீட்டியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கிணங்க நட்டமீட்டும் 39 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுPublished from Blogger Prime Android App