மழைக்கு மத்தியிலும் அம்பாறையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(18) அம்பாறை மாவட்டத்தில் கடும் மழைக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம், சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.

மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறை 3,34,698 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்முறை பரீட்சைகளில் இரண்டாவது வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டு.ஆ.னு.தர்மசேன குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிணங்க மாணவர்களின் உளநலத்தை கருத்திற்கொண்டு காலை 9.30 முதல் முற்பகல் 10.45 வரையான காலப்பகுதியில் இரண்டாம் பகுதி வினாப்பத்திரமே மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App