பாடசாலைகளில் விசேட போதைப்பொருள் சோதனை : போதை மாத்திரைகளை விற்பனை செய்த 75 பேர் கைது !

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 75 பேர் விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள 122 பாடசாலைகளில் நேற்று நண்பகல் முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 கிலோ 148 கிராம் மாவா, 9 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 1 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Published from Blogger Prime Android App