இதன்போது உரையாற்றிய அவர், “காணாமல்போனோர் அலுவலகத்தின் பணிகளை வேகமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதிப்படுத்தப்பட்ட ஆயிரத்து 653 ஆவணங்கள் இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், இழப்பீடு தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 320 ஆவணங்களுக்கு (குடும்பங்களுக்கு) இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அதேபோல 5 ஆயிரத்து 246 ஆவணங்கள் எஞ்சியுள்ளன.
இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 780 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக 9 மாகாணங்களிலும் செயலணி உருவாக்கப்படும். இதன் முதற்கட்டமாக வடக்கில் ஆளுநர் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.
