அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 79ஆம் இடத்தில்

உலக அறிவுச் சுட்டெண்ணில் இலங்கை 43.42 சதவீதத்துடன் 79ஆம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலுள்ளது.
குறித்த பட்டியலில் 68.37 சதவீதத்துடன், அமெரிக்கா முதலிடத்திலும் சுவிற்சர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து முதலான நாடுகள், முறையே இரண்டு முதல் ஐந்தாம் இடம் வரை தரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 41.52 சதவீதத்துடன், 91 ஆவது இடத்தில் இந்தியாவும், 34.44 சதவீதத்துடன் 110 ஆவது இடத்தில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.Published from Blogger Prime Android App