நாட்டில் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நேரம் இது : பசில் ராஜபக்ச!

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நேரம் இது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் இன்று கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைய தேர்தல்களில் வெற்றி பெற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் , மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.

எவ்வாறாயினும், பின்னடைவுகளை நிவர்த்தி செய்து, தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஆளுகை அல்லது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மீண்டும் பாராளுமன்றம் பிரவேசிக்க முடியாமல் போனதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஜனாதிபதியின் பணிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.Published from Blogger Prime Android App