மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை !

(இன்று அதிகாலை 02.30 மணிக்கு செய்யப்பட்ட ஆய்வின்படி).

தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தீவிர புயலானது (Severe Cyclonic Storm) கடந்த 06 மணித்தியாலத்தில் 12km/h வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 02.30 மணிக்கு தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ளது.

இது திருகோணமலையிலிருந்து வடக்கு-வடகிழக்காக 240km தூரத்திலும்

யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு-வடகிழக்காக 240km தூரத்திலும்

காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்காக 240km தூரத்திலும்

சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 320km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இது அடுத்துவரும் 06 மணித்தியாலத்திற்கு தீவிர புயலாக (Severe Cyclonic Storm) நிலை கொண்டு, அதன் பின்னர் படிப்படியாக அதன் தீவிரம் குறைந்து சூறாவளி புயலாக (Cyclonic Strom) மாற்றமடையும்.

அதன் பின்னர் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர பிரதேசத்தின் கடல் பிராந்தியங்களில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரி கோத்தாவிற்கும் இடையில் மகாவலிபுரம் அருகே ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் புயல் காற்றின் வேகமானது

65km/h - 75km/h வரை வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.Published from Blogger Prime Android App