நாட்டை அழிக்காமல் தேர்தலில் முடிந்தால் தம்மை தோற்கடித்து காட்டுங்கள் ! நாமல் ராஜபக்ஷ சவால்

ராஜபக்சக்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொதுத் தேர்தலில் முடிந்தால் தம்மை தோற்கடித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிய நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அரசியலமைப்பின் பிரகாரம், தேர்தலில் நின்று மக்களின் வாக்கு மூலம் ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால், போராட்டத்தின் மூலம் நாட்டில் ஏற்பட்ட பாதிப்பும் ,விடுதலை புலிகளால் ஏற்பட்ட பாதிப்பும் ஒன்றுதான்.’ என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய சவாலில் இருந்து மீள முயற்சிக்கும் வேளையில், சிலர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து எடுக்க முடியாத அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் மாற்று வழியை முன்வைக்கத் தவறிய போராட்டக்காரர்கள், ஜனாதிபதிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆணை இல்லை என கூறுகின்றார்கள்.

இதன் மூலம் அவர்களுக்கு அரசியலமைப்பு பற்றிய போதிய அறிவில்லை என்பது தெளிவாகியுள்ளது எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.Published from Blogger Prime Android App