ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் - ரிஷாட் எம்.பி சந்திப்பு!

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு (13) இலங்கைக்கான ஐ.நா தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் அவற்றிலிருந்து மீண்டெழுவதற்கான வழிவகைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், சர்வதேச முகவராண்மைகளின் ஆதரவுடன் முன்னோக்கி செல்லும் முறைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதேவேளை, ஐ.நா வதிவிடப் பிரதிநிதி இலங்கைக்கு ஆற்றிய அளப்பரிய பணிகளுக்கு நன்றியினை தெரிவித்த ரிஷாட் எம்.பி, தனது சேவைக்காலத்தை நிறைவு செய்யவுள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.Published from Blogger Prime Android App