சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா.
பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மட்/பட்/ சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் த.செல்வநாயகம் தலையில் இன்று(03)இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம்,பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன்,பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், போரதீவுப்oபற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.அருள்ராஜா,ஆசிரிய ஆலோசகர்கள்,போரதீவுக்கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர்,கிராம சேவை உத்தியோகத்தர், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.பிரதானமாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.நிகழ்வுகளுக்கான பிரதான அனுசரணையை எமது சமூக அமைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.