நுவரெலியா நகர மண்டபத்தில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பாக அரச அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள பயிரிடக்கூடிய இடயங்களை, உற்பத்திக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உரப்பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவருகின்றது. களைக்கொல்லி உள்ளிட்டவையும் வழங்கப்படும். அதாவது விவசாயிகளுக்கு தேவையா சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.
அரிசியில் போன்று மரக்கறி உள்ளிட்டவற்றிலும் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் அரசியல் சார்பற்றது. அதனை அனைவரும் பொறுப்பேற்கலாம்.
அதேவேளை, கால்நடை வளர்ப்பு மற்றும் தேசிய பால் உற்பத்தி சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றின் அபிவிருத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
