மின் கட்டணம் உயர்ந்தால் மின் இணைப்பை துண்டிக்க மாட்டோம் : மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு !

மின் கட்டணத்தை மீண்டும் அரசாங்கம் உயர்த்தினால், கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பை தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் துண்டிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நெருக்கடியில் உள்ள இந்த சமயத்தில், மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட 75வதவீத மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Published from Blogger Prime Android App