ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது : அரசாங்கம் அறிவிப்பு !

அரச நிறுவனங்களின் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது உடனுன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது குறித்து பொது நிறுவனங்களுக்கான குழு கவலை தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்வதையும் அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது.

இதன்படி, பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட கவலைகளைக் கருத்தில் கொண்டு, அரச வங்கிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.Published from Blogger Prime Android App