மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா – சாணக்கியன் கேள்வி!

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியாத விசமிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சோளார் மின்விளக்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் கடந்த 2 வருடங்களாக மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் தற்போது ஓரளவிற்கேனும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்ற நிலையில், மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக தான் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் வகையில், தன்னை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த செயற்பாடு அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீண்டும் மட்டக்களப்பில் ஒட்டுக்குழுக்கள் தங்களது ஆராஜக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனரா எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.Published from Blogger Prime Android App