சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவது தொடர்பான அறிக்கையை தயாரிக்க குழு நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை !

சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவது தொடர்பான அறிக்கையை தயாரிக்க குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு இந்த பணிபுரிய வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தக் குழுவில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை உள்ளடக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

விரைவில் இந்தக் குழுவை நியமித்து குறுகிய காலத்திற்குள் அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.Published from Blogger Prime Android App