பொறுமையாக இருங்கள்: இன்னும் நிறைய நேரம் இருக்கிறது!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதகமான வரவு செலவுத் திட்டம் என்பதால் எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (11) பிற்பகல் அனுராதபுரம் விகாரைக்கு சென்ற அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

“இது ஒரு நேர்மறையான பட்ஜெட் என்று நான் நினைக்கிறேன். பட்ஜெட்டில் இருந்து எதிர்பார்த்த நிவாரணம் எதிர்காலத்தில் கிடைக்கும்.”

கேள்வி – தேர்தல் வருமா?

“ஒரு தேர்தல் வந்தால் அதற்கு தயாராகி விடுவோம். இன்னும் அப்படி ஒரு நம்பிக்கை இல்லை. நிறைய நேரம் இருக்கிறது.”

கேள்வி – மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் ?

“பொறுமையாக இருக்குமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்Published from Blogger Prime Android App