மட்டக்களப்பில் கூடுகின்றது தமிழரசுக்கட்சியின் மத்திய குழு!

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 07ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

எனவே அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App