இன்று முதல் விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

இரட்டைக் குடியுரிமை வழங்கும் போது பெறப்படும் கட்டணங்கள் உட்பட பல பிரிவுகளின் விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் 22 வயதுக்குட்பட்ட தனிநபர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுபவர்களுக்கு 500 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும்.

குடியுரிமைச் சட்டத்தின் கீழ் சான்றிதழ்களின் நகல் வழங்குவது ஒரு பிரதிக்கு ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.Published from Blogger Prime Android App