ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி பிரதானிகளுக்கும் இடையே முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின், உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கு இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கத்துவப்படுத்தும் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளை சார்ந்த 50 பிரதானிகள் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.Published from Blogger Prime Android App