இலங்கையின் உயர்தொழில்நுட்ப விவசாயத் துறையில் முதலீடு செய்யுமாறு, மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு !

இலங்கையின் உயர்தொழில்நுட்ப விவசாயத் துறையில் முதலீடு செய்யுமாறு, மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
மாலைதீவு துணை ஜனாதிபதி பைசல் நசீம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை கருத்திற் கொண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்நிலை சுற்றுலா துறைகள் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள மாலைத்தீவுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் ஜனாதிபதி ரணில் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போதைப்பொருள் கொள்ளைக்கு எதிராக மாலைதீவின் உதவியை நாடினார்.Published from Blogger Prime Android App