பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை : ஜனாதிபதி !

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும் தற்போது 12 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்தில் இருப்பது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்

பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு புதிய சட்டங்களை உருவாக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டியல் முறையொன்றை அறிமுகப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App