மண்டோஸ் புயல் : விமான சேவைகள் இரத்து !

மண்டோஸ் புயல் காரணமாக கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உள்ளிட்ட மூன்று சர்வதேச விமானங்களும் 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும், இரத்து செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு, அபுதாபி மற்றும் பிரெஞ்சு ரீயூனியனில் உள்ள ரோலண்ட் கரோஸ் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பயணித்த சர்வதேச விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

தூத்துக்குடி, கடப்பா, மைசூர், பெங்களூரு, மதுரை, விஜயவாடா, மங்களூரு, காலிகட், ஹூப்ளி, கண்ணூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் உள்ளூர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App