இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட குழுவினர் திகிலிவெட்டைக்கு கள விஜயம்!!

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் குழு திகிலிவெட்டை பாலத்திற்கான கள விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூர் உற்பத்தி மற்றும் வேளாண்மை தன்னிறைவு போன்றவற்றிற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வீதிகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி முடிந்தவரை விரைவாக செய்துகொடுப்பதற்கான முயற்சிகள் பல கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வளங்கள் தொடர்பிலும் மற்றும் அவற்றை வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு பாரிய சவால்களாகவுள்ள சீரற்ற பாதை அமைப்புக்கள் மற்றும் அதனுடன் இணைந்த பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் தெளிவுபடுத்தும் முகமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிலிருந்து வரவழைக்கப்பட்ட அமைச்சின் செயலாளர் R.W.R.பிறேமஸ்ரீ மற்றும் அவருடன் இணைந்த குளாமினருடன் மிக விரைவில் அமைக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் திகிலிவெட்டை பாலத்திற்கான கள விஜயத்தினை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்திருந்தார்.

இதன்போது இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்கள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.Published from Blogger Prime Android App