போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் : பொலிஸாரின் அறிவிப்பு!

போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் முன்னோடித் திட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை செய்தவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் தற்போதைய நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்தார்.

"இப்போது நாங்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை மட்டுமே கைது செய்கிறோம். எதிர்காலத்தில், போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன சாரதிகளை கைது செய்ய வீதி பாதுகாப்பு தேசிய சபையினால் 160 மில்லியனை பொலிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது."Published from Blogger Prime Android App