நாடும் பாடசாலை முறையும் போதைப்பொருளால் நிரம்பியுள்ளதாகவும், நாட்டின் சட்ட முறைமைகள் திருத்தப்பட்டு நீதித்துறை உடனடியாக பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளை நோக்கி கல்வி முறையை மாற்றியமைத்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்குப் பதிலாக அதிகாரிகள் பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனையிடும் அதேவேளை இலங்கை போதைப்பொருள் மையமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளுக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள புகையிலை நிறுவனங்களிடமிருந்து அரசாங்க அதிகாரிகள் பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாகவும், எனவே சிகரெட்களுக்கு வரி விதிக்காமல் பொதுமக்களுக்கு வரி விதிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
