நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள தையடுத்து அதனை தடுப்பதற்கா நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.பி ஹட்டியாராச்சி தலைமையில் இன்று புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மைக்கல் தேசிய ஆண்கள் பாடசாலையின் வாசலில் மேப்பநாய்கள் சகிதம் பாடசாலைக்குள் உள் நுழையும் மாணவர்கள் அவர்களது பைகள் என்பற்றை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து ஏனைய பாடசாலைகளில் இடம்பெறும் எனவும் மாணவர்கள் பெற்றோர்கள் போதை பொருள் வியாபாரிகள்; மற்றும் பாவிப்பவர்கள் தொடர்பாக அறிந்திருந்தால் உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியதருமாறும் போதை பொருள் வியாபரிகள் தொடர்பாக விழிப்பாகவும் இருக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.
