பசில் ராஜபக்ஷ – ஜனாதிபதி இடையில் அவசர சந்திப்பு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தற்போதைய நிலைமை, அரசியலமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருவருக்குமிடையில் மாத்திரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Published from Blogger Prime Android App