நஷ்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்த முடியாது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய !

நஷ்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்த முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நஷ்டமடையும் அரச நிறுவனங்கள் 8 அம்ச அடிப்படையில் மறுசீரமைக்கப்படவுள்ளதாகவும் இந்த மறுசீரமைப்பு என்பது தனியார் மயப்படுத்தல் அல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் கூறினார்.

49க்கும் அதிகமான அரச நிறுவனங்களின் நஷ்டம் திறைச்சேரி ஊடாக முகாமைத்துவம் செய்யப்படுவதாகவும் இந்த நஷ்டத்தை நாட்டு மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது வெளிப்படைத்தன்மை, மக்களுக்கான சேவை நலன்புரி சேவை உறுதிப்படுத்தல், தொழிலாளர்களின் தொழில் மற்றும் தொழில் உரிமை பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Published from Blogger Prime Android App