தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முயற்சி !

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், குறுகிய கால முதலீட்டிற்காக தபால் துறையில் சேர தனியார் துறையினரை அழைப்பதாகவும் அவர் கூறினார்.

மத்துகம தபால் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தபால் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே தனியாரிடமிருந்து உரிய ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.Published from Blogger Prime Android App