வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள்

வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சனிக்கிழமை(17) நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் இ இராசமாணிக்கம் சாணக்கியன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சமூக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஸ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இது தவிர காரைதீவு பகுதியிலும் மக்கள் சந்திப்பு ஒன்று மாலை இடம்பெற்றது. இதன் போது அம்பாறை மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழரசுக்கட்சியினரின் இளைஞர் அணி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் சார்பிலான கேள்விகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.Published from Blogger Prime Android App