'எனக்கும் குரல் இருக்கிறது' என்ற தொணிப்பொருளில் சிவில்

'எனக்கும் குரல் இருக்கிறது' என்ற தொணிப்பொருளில் சிவில் அமையத்தினால் சர்வதேச மனித உரிமைகள் தினம் தொடர்பான நிகழ்வுகள் இன்று (10)தன்னாமுனை மினானி தொழில்நுட்ப நிலைய கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அமுதா மடடக்களப்பு பிராந்திய மனித உரிமைகள் இணைப்பாளர் இஸ்ஸதீன் மன்முனை வடக்கு சர்வமத ஒன்றிய செயலாளர் ஜோய்யல் தன்னாமுனை சென் சூசையப்பர் கல்லூரி அதிபர் பெட்றிட், சிவில் அமைப்பாளர் ஜே.கோபிநாத் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் இணைப்பாளர் கிரிசாந் ஆகியோர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தொணிப்பொருள் சார்ந்த விடயங்கள் பற்றி உரையாற்றினார்கள்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மனித உரிமைகளின் நிலை மற்றும் அதன் தேவை தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.மாணவர்களினால் மனித உரிமைகள் தொடர்பாக வரையப்பட்ட ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது.அதில் குறிப்பாக இளைஞர் சமூதாயம் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது கடந்த வாரம் முதல் மாவட்டம் தழுவிய ரீதியில் பல்வேறு பாடசாலைகளில் மாணவர் மத்தியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் தொடர்பான தொணிப் பொருளுடன் நடாத்தப்பட்ட கடடுரை ,ஓவியம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன. மனித உரிமைகள் சார்ந்த கலை நிகழ்சிகளும் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் சமூக சேவையினை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்ட்டனர்.Published from Blogger Prime Android App