இரசாயன உர இறக்குமதிக்கான தடை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !

இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, விவசாய அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் கீழ் க்ளைபொசேட், யூரியா, அமொனியா, சல்பேட், பொற்றாசியம் கிளோரையிட், பொற்றாசியம் நைட்ரேட் உள்ளிட்ட இரசாயன உரங்களை திறந்த கணக்கின் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும்.

இதேவேளை, சோள இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டு, கால் நடைக்கான தீவனம் தவிர்ந்த ஏனைய இறக்குமதியாளர்கள் ஜனவரி 15ஆம் திகதி வரையில் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தடை செய்யப்பட்ட காற்றாடிகள், வெசாக் கூடுகள் மற்றும் மூங்கில் உற்பத்தி பொருட்களை எதிர்காலத்தில் மீண்டும் இறக்குமதி செய்வதா என்பது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App