போலி தகவல்கள் ஊடாக வெளிநாடு செல்வதை தடுக்க விசேட திட்டம் !

போலியான தகவல்கள் ஊடாக வெளிநாட்டு வேலைக்கு செல்வதை தடுக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஆட்பதிவு திணைக்களத்திற்கும் இடையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து தனிப்பட்ட தகவல்களை மாற்றிக்கொள்வதாக எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அதனைத் தடுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதன்படி, சந்தேகத்திற்கிடமான நபர்களின் தகவல்களை உடனுக்குடன் சரிபார்ப்பதற்காக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினிமயமாக்கப்பட்ட தரவு அமைப்பைப் பயன்படுத்த இந்த ஒப்பந்தம் உதவுகிறது.Published from Blogger Prime Android App