உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளது : பந்துல குணவர்தன !

உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமது கட்சி தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதனை எதிர்கொள்ளுமாறு கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் சார்பில் வேட்புமனுக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவற்றைக் கையாள்வதற்கு பொறிமுறைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.Published from Blogger Prime Android App