குறித்த நிகழ்வானது ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தளவாய் வட்டார உறுப்பினர் நா.மோகனராஜன் தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
தளவாய் வட்டார உறுப்பினர் நா.மோகனராஜன் அவர்களின் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக, 33 மீற்றர் நீளமான குறித்த வீதி, ரூபா 1 மில்லியன் பெறுமதியில் கொங்கிறீட் வீதியாக புணரமைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேசபையின் தவிசாளர், பிரதேச சபை செயலாளர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த வீதியானது நீண்டகாலமாக சீரற்ற நிலையில் காணப்பட்டதனால் இவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
