சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் : டக்ளஸ் தேவானந்தா !


Published from Blogger Prime Android App

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் கடற்றொழிலாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக்கும் முல்லைத்தீவு, கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கும் கள்ளப்பாடு பகுதியில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டது

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்தகாலங்களில் எங்கள் மக்கள் தேவையில்லாமல் துன்பங்களை சந்திக்கவேண்டி வந்திருந்தது இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டதில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பியல் கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை பிரதிநிதிகளை அழைத்து கதைத்திருந்தார் 30 ஆண்டுகளாக நாங்கள் எதை சொல்லி வந்தனாங்களோ அதனைத்தான் அதில் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னுடைய தர்க்கம் என்ன என்றால் அன்று அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு அழிவும் துயரமும் வந்திருக்காது. நான் எந்த வேறுபாடு காரணமாக இதனை சொல்லவில்லை என்னுடைய மக்கள் நலன் சார்ந்து தான் சொன்னேன்.

1990 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற ஜனநாயகம் தேசிய நல்லிணக்கம் ஊடாகத்தான் தேசிய இனப்பிரச்சினையினை தீர்க்காலம் என்ற கொள்கையுடன் நான் இருக்கின்றேன்.

ஆயுதம் தூக்கி முன்னர் போராடினாங்கள் ஆயுத பலத்திற்கு ஊடாக பிரச்சினையினை தீர்க்கலாம் என்று அது ஒரு கட்டம் மட்டும் எங்களுக்கு தேவைப்பட்டது இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலமை இன்று உருவாகியுள்ளது.

நாங்கள் போராடுவது இருக்கின்றதை பாதுகாத்துக் கொண்டு முன்னேக்கி செல்வதற்கு எங்கள் மக்களை இருக்கின்ற நிலமையினை பாதுகாத்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்று அன்று தொடக்கம் நான் சொல்லி வருகின்றேன்.

தன்னை தலைவர் என்று சொல்லுபவர் முன்னர் நீதிபதியாக இருந்து எங்களுக்கு தண்டனை வழங்கியவர் அவர் இன்று அரசியல் நடத்துகின்றார். அவர் தமிழ்மக்களின் ஒற்றுமை அவசியம் என்று சொல்கின்றார். தேர்தல் என்று வரும்போது அவர்கள் ஒற்றுமையினை பற்றி கதைப்பார்கள். சக தமிழ் கட்சிகள் எல்லாம் தேர்தலில் வாக்குகளை அபகரிப்பதற்காக ஒன்று சேருகின்றார்கள் தேர்தல் முடிந்தவுடன் பழைய குருடி கதவைத் திறவடி என்ற மாதிரியான செயற்பாடுதான் நடக்கின்றது.

கடற்படையினர் எல்லா நேரமும் இந்திய படகுகளை பிடிப்பார்கள் என்று நம்பி இருக்கக் கூடாது நாங்களும் ஈடுபட வேண்டும் அப்படித்தான் பொலிஸூம், இராணுவமும் தாங்களும் பிடிப்பினம் என்று போட்டி போட்டு வருவார்கள்.

இன்று களவுகள் நடக்கின்றன பொலீஸ் இருக்கின்றார்கள் தான் என்று எல்லா களவுகளையும் நிப்பாட்ட முடியமா நாங்களும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை சொல்லி நிக்கின்றேன்.

இந்திய இழுவைப்படகுகளால் 500 மில்லியன் கடல் தொழில் உபகரணங்களை இழந்துள்ளார்கள். வளங்களை இழந்துள்ளார்கள் பிடிக்கப்பட்ட இந்திய இழுவை படகுகளை ஏலத்தில் விட்டோம் அந்த பணம் திறைசேரிக்கு சென்று விட்டது இவ்வாறு இந்திய மீனவர்களிடம் இருந்துகைப்பெற்றப்பட்ட படகுகள் திருத்த வேண்டும் அதனை திருத்தி மீண்டும் எங்கள் மீனவர்களுக்கு கொடுக்கவுள்ளோம் பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் என்று இந்தியாவில் இருந்து போன் பண்ணி கேட்டார்கள் படகினை கொடுக்க வேண்டாம் பெறுமதியான படகு என்று சொன்னார்கள் நான் அவர்களுக்கு சொன்னேன் குறைந்தது 6 மாதத்திற்கு எங்கள் கடலில் உங்கள் தலைக்கறுப்பு தெரியக்கூடாது அதனை நடைமுறையில் காட்டுங்கள் ஆறு மாதத்திற்கு பிறகு பாக்கலாம் என்று சொல்லி விட்டேன் கிட்டடியில் கொழும்பு துறைமுகத்திற்கு இந்திய கப்பல் ஒன்று வந்தது எனக்கும் அழைப்பு கிடைத்தது நானும் சென்றேன் அதில் இரண்டாம் தர அதிகாரி என்னிடம் கேட்டார் எங்களுக்கு எல்லாம் விளங்குது நீங்கள் பிரதமர் மோடி,ஜெயசங்கர் ஆகியோரை சந்திக்கும் போது திட்டம் ஒன்று கொடுத்தீர்கள் அதனை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கொரோனா வந்திட்டு அதோட கைவிட்டு போச்சு அவர்கள் கதைப்பதாக சொன்னார்கள் இன்னும் வரவில்லை என்னுடைய சித்தாந்தம் புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா என்றால் புண்ணுக்கு வலி என்றுதான் என்னுடை சித்தாந்தம் சக தமிழ்கட்சிகளின் அரசியல் சித்தாந்தம் மருத்துக்குத்தான் வலி என்பது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துறைமுகம் ஒன்றினை நிறுவுதற்கான பொருத்தமான இடம் ஒன்றினை பார்க்கவேணும் பார்த்து கட்டவேண்டியுள்ளது. வடக்கில் மயிலிட்டி துறைமுகம் ஒன்று இருக்கின்றது அன்று நான் ஆட்சியில் இருக்கவில்லை தமிழ்தேசியக்கூட்டமைப்புத்தான் ஆட்சியில் இருந்தது.

அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்றால் துறைமுகம் கட்டினால் வேறு மாவட்டத்து இடத்து ஆட்கள் எல்லாம் அங்கு வருவினம் என்று இதற்கு யார் பிழை இங்குள்ள தமிழ்கட்சிகள்தான் பிழை இவர்கள் என்ன செய்திருக்கவேண்டும் துறைமுகத்தினை புனரமைக்க ஆயத்தப்படுத்தும் போது சமமாக ஆட்களை திரட்டி பயிற்சிகளை கொடுத்து இலகு கடனினை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

இவர்கள் எதில் அக்கறையாக இருந்தார்கள் அவர்களுக்கு எந்தளவுக்கு தரகுப்பணம் வாங்கலாம் என்பதில் தான் அக்கறை செலுத்தினார்களே தவிர மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. என்னுடைய காலத்தில் அது புனரமைக்கப்படவில்லை புனரமைப்பதற்கு இரண்டு ஆண்டுகள் செல்லும் என்னுடை எண்ணம் சிந்தனை சகலதும் என்னுடைய மக்கள்.

தேசிய நல்லிணக்கம் என்பது நிர்வாகத்துடன் தவண்டு ஆமிக்காரனின் வூட்ஸ் காலினை நக்குவதல்ல யாழ்ப்பணத்தில் 40 படகுகள் நான்தான் கையசைத்து ஆரம்பித்து வைத்தது ஆனால் என்னை 400 படகுகள் இன்று அதனை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விரும்புகின்றேன் வடமாகாணம் தென்மாகாணத்தில் 1000 படகுகள் அதில் தங்கி இருப்பதாக குறிப்பிட்ட ஆட்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு இரண்டு மூன்று ஆண்டு அவகாசம் கொடுத்து அதற்கிடையில் அவர்கள் மாற்றுத்தொழிலுக்கு செல்லவேண்டும் அவ்வாறு செல்லவில்லை என்றால் அது முற்றுமுழுதாக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.