மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு !

லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை இன்று (9) முதல் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினாலும், 425 கிராம் ரின் மீன் ஒன்றின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் புதிய விலை 215 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 199 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 425 கிராம் ரின் மீன் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக குறைந்துள்ளது.Published from Blogger Prime Android App