சூறாவளி மாண்டேஸ் - (Cyclone - Mandous)

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத்தில் (08.12.2022 - 23.30) மணிக்கு வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு (23.30) ஒரு சூறாவளியாக தீவிரமடைந்து உள்ளது.

இது தாழமுக்கம் என்ற நிலையிலிருந்து சூறாவளி என்ற நிலைக்கு தீவிரம் அடைந்துள்ளதன் காரணத்தினால் கடந்த 02ஆம் திகதி நான் ஏற்கனவே இந்த பதிவில் தெரிவித்ததை போன்று பிராந்திய விசேட வளிமண்டலவியல் நிலையத்தினால் (Regional Specialized Meteorological Centre - RSMC) இதற்கு மாண்டஸ் (Mandous - pronounced as Man-Dous) எனும் பெயர் RSMC இனால் வழங்கப்பட்டுள்ளது.

இது தற்போது திருகோணமலையிலிருந்து கிழக்கு-வடகிழக்காக 370km தூரத்திலும் , யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்காக 550km தூரத்திலும் , காரைக்காலில் இருந்து தென்கிழக்காக 560km தூரத்திலும், சென்னையிலிருந்து தென்கிழக்காக 640km தூரத்திலும் தற்போது மையம் கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர பிரதேசத்தின் புதுச்சேரிக்கும் சிவஹரிகோட்டாவிற்கும் இடையே எதிர்வரும் 09ஆம் திகதி இரவு

65km/h - 75km/h வேகத்தில் வீசும் காற்றுடன் இப்பிரதேசத்தை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதுPublished from Blogger Prime Android App